திருச்சி மத்திய மண்டல தலைவர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவணசுந்தர், மேற்பார்வையில், திருச்சி காவல் சரக கண்காணிப்பாளர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் தலைமையில், குட்கா மற்றும் புகையிலை சிறப்பு அதிரடி வேட்டை நேற்று (16.06.2022)-ஆம் தேதி நடத்தியதில், திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்து 6.10 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்து 5.515 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், கரூர் மாவட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்து 80.339 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 வழக்குகள் பதிவு செய்து 1.740 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 23 வழக்குகள் பதிவு செய்து 18.599 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது (மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அளவு மற்றும் அதன் மதிப்பு – 112.293 கிலோ கிராம் , ரூபாய் 94514/-)
மேலும் இவ்வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டு குட்கா மற்றும் புகையிலை குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.