குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

0 282
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் – 51 மற்றும் நான்கு சக்கர வாகனம்- 1 ஆகியவற்றினை திருச்சிராப்பள்ளி, சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகின்ற 20.06.2022 – ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், உதவி ஆணையர் கலால் மற்றும் மண்டல துணை இயக்குநர், அரசு தானியங்கி பணிமனை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் (முன்வைப்புத்தொகை) தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000/-ம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு டெபாசிட் (முன்வைப்புத்தொகை) தொகையாக ரூ.10,000/-ம் செலுத்தி ஏலம் கோர வேண்டும், ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் திருச்சிராப்பள்ளி, சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 20.06.2022-ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.