மனசாட்சிப்படி வாழவேண்டும் – மணப்பாறை பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்

0 487
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுரை மாவட்டம், வலைச்சேரிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நாளை சுதந்திரதினம் என்பதால் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம் என்று கூறி பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகளை உடலில் கட்டிக் கொண்டு மக்களிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதில் மனித நேயம் வளர்க்க வேண்டும், மனசாட்சி படி வாழ வேண்டும், தேசத்திற்காக போராடி சுதந்திரம் பெற்ற தலைவர்களை எந்நாளும் நினைவு கூறுவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதே போல் அகிம்சை வழியை பின்பற்றுவோம், ஜனநாயகத்தை பாதுகாப்போம், மனசாட்சிப்படி வாக்களிப்போம் உள்ளிட்ட வாசகங்களும் இருந்தது. பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.