தூய்மைப் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாபெரும் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது,
“அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், சுகாதாரத்தைப் பேணுவது நமது கடமை என்றும், தூய்மைப் பணி என்பது ஒரு நிகழ்வாக அல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு பணியாகக் கருதி, நமது சுற்றுப்புறத் தூய்மைப் பணியினை அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக மேற்கொள்ள வேண்டும் என்றும்” தெரிவித்தார் .
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ( பொ) ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் சண்முகம், செல்வ பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.