திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லோடு வேன் பறிமுதல்….

0 280
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தொட்டியம் அருகே திருச்சி நாமக்கல் மெயின் ரோட்டில் மேய்க்கல் நாயக்கன்பட்டி வேகத்தடை அருகே லோடு வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உரிய அரசு அனுமதி இல்லாமல் ஆற்று மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்தது‌ கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தை காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் ஏலூர்பட்டியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து லோடு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.