தூய்மைப்பணியாளரின் பிறந்த நாளை கொண்டாடிய மாமன்ற உறுப்பினர் ரமேஷ்
திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு தூய்மை பணியாளரின் பிறந்த நாளை மாமன்ற உறுப்பினர் கொண்டாடினார்.
திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு கோ.ரமேஷ் அவர்கள் 46 வது வார்டு தூய்மை பணியாளர் சுரேஷ் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு பொன்னாடை போர்த்தி, கேக் வெட்டியதுடன், மரக்கன்று நட்டு , வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும் அனைத்து தூய்மை பணியாளருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுவிற்கு மேஸ்திரி , தூய்மை பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .