தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் தொமுச முதன்மை சங்கமாக தேர்வு…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் பங்குபெறும் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலில் தொமுச 2 உறுப்பினர்களை பெற்று மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்று உள்ளது.
திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்காக அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு கொரொனா காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது அதற்கான தேர்தல் நடந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 565வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் நேற்று நடந்த தேர்தலில் 4488 வாக்குகள் பதிவானது இது 98.3 சதவீதம் ஆகும். இதில் 10% வாக்குகள் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதில் தொமுச, ஏடிபி, ஐஎன்டியூசி, டிடிஎஸ் மற்றும் ஏஐடியூசி, அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ், சிஐடியு, எல்எல்எப், என்டிஎல்எப் என 9 சங்கங்கள் போட்டியிட்டன. தேர்தல் நேற்று காலை 8மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 5 மணி முடிவடைந்தது, பின்னர் இரவு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இரு தொமுச 938 வாக்குகள் இரண்டு உறுப்பினர்களுடன் மீண்டும் முதன்மை சங்கமாக தேர்வு பெற்று உள்ளது. ஏடிபி 738 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஐ என் டி யுசி 579 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், பிஎம்எஸ் 571வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும், சிஐடியு 568 வாக்குகள் பெற்று 5-ஆம் இடத்தையும் பெற்று உள்ளது இந்த தொழிற்சங்கங்கள் தல ஒரு உறுப்பினர்களை பெற்றுள்ளது.
இதில் அதிக வாக்கு மற்றும் உறுப்பினர்களை கொண்ட சங்கவும் முதன்மை சங்கமாகவும் திமுக தொழிற்சங்கமான தொமுச தேர்வு செய்யப்பட்டு உள்ளது.