பேருந்தை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா கைது….

0 438
Stalin trichy visit

22.06.22-ந்தேதி ஸ்ரீகிருஷ்ண டிராவல்ஸ் மேலாளர் முருகானந்தம் என்பவர் கண்டோன்மெண்ட் காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில் தங்களது டிராவல்ஸ் கம்பெனியின் பேருந்து ஒன்று கடந்த 11.06.22-ந்தேதி இரவு சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வரும்போது உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற ஒரு காரின் மீது மோதியதில் சூர்யா என்பவர் வைத்து இருக்கும் காருக்கு சேதம் அடைந்ததாகவும், இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், மேற்படி காருக்கு ஏற்பட்ட சேதாரத்தை சரி செய்து கொடுத்துவிடுவதாக சமாதானமாக பேசியும், மேற்படி காரை திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் சரிசெய்வதற்காக கொடுத்துள்ள நிலையில் கடந்த 19.06.22-ந்தேதி காரை உபயோகித்து வந்த சூர்யா த.பெ.சிவா அவரது ஆட்களுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு சென்னைக்கு ஆட்களை ஏற்றி கொண்டிருந்த NL 01 8 0984 என்ற பேருந்தில் இருந்த பயணிகளை மிரட்டி கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டு, ஒட்டுனரை மிரட்டி தான் உபயோகித்த காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்துவிட்டு மேற்படி பேருந்தை எடுத்து கொள்ளுமாறு தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தும் , பேருந்தை ஒட்டுனருடன் கடத்தி சென்றுவிட்டதாகவும்,  பேருந்தை மீட்டு, அதை கடத்திய சூர்யா மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை கோரி புகார் கொடுத்துள்ளார்.

புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மை என தெரியவந்ததால், வழக்கின் எதிரியான சூர்யா 32/22, த.பெ.சிவா என்பவரை கைது செய்து,  பேருந்து கடத்தி வைக்கப்பட்டிருந்த இடமான மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை தனியார் பெட்ரோல்பங்கில் இருந்த பேருந்தை மீட்டு, வழக்கின் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.