ஆங்கரையில் முழுநேர நியாயவிலைக்கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி ஒன்றியம் , ஆங்கரை கோவிந்தராஜபுரத்தில் முழு நேர நியாய விலைக்கடையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று (25.6.22) திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், , சட்டமன்ற உறுப்பினர்
அ. சௌந்தரபாண்டியன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்தி. ஜெயராமன், ஒன்றியக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன் , மாவட்டப் பிரமுகர் திரு.க.வைரமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்