தனியார் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 361
Stalin trichy visit

சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வட்டார போக்குவரத்து சார்பாக தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி இன்று நடைபெற்றது.

இதில் திருச்சி கிழக்கு மேற்கு திருவரம்பூர் மணப்பாறை ஸ்ரீரங்கம் லால்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து 604 வாகனங்கள் பங்கு பெற்றதில் 420 வாகனங்கள் தேர்வானது, 70 வாகனங்கள் சரி செய்ய அனுப்பினர். 27 வாகனங்கள் நிராகரிப்பட்டது.
இந்த ஆய்வுப்பணியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளி வாகனங்களில் அதிகளவு குழந்தைகளை ஏற்றும் வாகனங்களை கண்காணிக்கப்படும்.
இப் பகுதியில் மாட்டு வண்டி மற்றும் மணல் லாரிகளால் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ஜூலை 6 ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.