திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்து 16 பேர் விடுதலை

0 315
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழர்கள் 16 பேரை விடுவித்து அவர்களில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் 11 பேர் மற்றும் முகாமிற்கு வெளியில் வசிக்கும் 5 பேர் தமிழ்நாட்டில் உள்ள தங்களது இல்லத்திலிருந்த வழக்கை நடத்திட வேண்டும் என்றும் , எவ்வித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்கிற நிபந்தனையுடனும் விடுவித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்  இம்முகாமிற்கு இன்று (2.7.22) வருகைதந்து , அவர்களைச் சந்தித்து,
இச்சிறப்பு முகாமிலிருந்து விடுவித்ததற்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , எவ்வித குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்தார்.மேலும் முகாம்வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து , உரிய நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.