இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு

0 349
Stalin trichy visit

மணப்பாறையை அடுத்த இ.கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (69). இவர் ஒத்தக்கடை இனாம்புதூர் பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஜெயராமன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.