சமயபுரம் மாரியம்மன் கோவில் வேப்ப மரத்தில் இருந்து வடியும் பால் – அதிசய காட்சியை பார்க்கக் குவிந்த பக்தர்கள்

0 830
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில்
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் மிகவும் முக்கியமான சக்தி ஸ்தலமாக விளங்குகிறது

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் மட்டும் வெளி மாநிலத்தவரும், வந்து செல்கின்றனர். மேலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பௌணர்மி,அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் முடி காணிக்கை செலுத்தும் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் இன்று காலை திடீரென பால் வடிந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட சில பக்தர்கள் வேப்ப மரத்தில் இருந்து வடியும் பாலை குடித்தும் பாட்டில்களில் பிடித்தும் செல்கின்றனர். மேலும் இதுகுறித்து அறிந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தும், மரத்திலிருந்து பால் வடியும் அதிசய காட்சியை பார்த்தும் செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.