திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் மேம்பாலம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ரயில்வே போலீசார் விசாரணை.
மணச்சநல்லூர் அருகே கல்பாளையம் ஊராட்சில் உள்ள தெற்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் 32 வயதான அசோக்.பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது தந்தையின் வாகனத்தை எடுத்துக்கொண்டு லுங்கி பணியுடன் வந்தவர் கூத்தூர் மேம்பாலம் ரயில் தண்டவாளம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். அப்போது அவ்வழியே சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி கோட்ட ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.