திருச்சி ரோட்டரி சக்தியின் சார்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் -மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி

0 466
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருச்சிராப்பள்ளி ரோட்டரி சக்தியின் சார்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி தொடக்க விழா இன்று  நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. வில்லிபுளோரா வரவேற்புரையாற்றினார்.ரோட்டரி சக்தி தலைவர்  பியாட்ரிஸ் வனஜா தலைமை தாங்கினார் . திருச்சி இ.ஆ.பெ – வி.மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் இரா .இராஜேந்திரன் பயிற்சியை தொடங்கி வைத்தார். ரோட்டரி சக்தி செயலர் நமீதா வாழ்த்துரை வழங்கினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் Uட்டதாரி ஆசிரியர் க.அருள்மொழி நன்றியுரை கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.