மக்கள் பணியில் 43 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 257
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், ஆயில் மில் மெயின் சாலையில் ரோட்டில் உள்ள மணலை அள்ளி ஒழுங்கு படுத்தியதையும், பர்மா காலனி முத்து மாரியம்மன் கோயில் அருகில் உள்ள மாநகராட்சி தண்ணீர் டேங்கினை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தினையும் துணை ஆணையர் தயாநிதியுடன் பார்வையிட்டார். தொடர்ந்து காவேரி நகர் நாடார் சமுதாய கூடம் பின்புறம் உள்ள பிரதான சாக்கடை கட்டையின் மேலே சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தினையும்,  காவேரி நகர் நாடார் சமுதாயக் கூடத்தின் எதிராக உள்ள பழைய தண்ணீர் டேங்க் சிதலமடைந்துள்ள இடத்தினையும், காந்தி சாலையில் தனிநபர் ஆணையர் பெயரில் உள்ள இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும், ஆயில்மில் பொது கழிப்பிடத்தையும், பொது மக்களிடம் எவ்வாறு குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் கூறினார். மேலும் போஸ் தெருவில் உள்ள சாக்கடை கட்டளையின் மேலே சுவர் எழுப்பி சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தினையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் கல்வெட்டு பாலம் சிதைவடைந்து உள்ள இடத்தினையும் துணை ஆணையர் தயாநிதியுடன் பார்வையிட்டார்.

பர்மா காலனியில் நீண்ட ஆண்டுகளாக இயங்கி வரும் மாவீரன் நேதாஜி பொதுப்பணி மன்றம் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பணிகளை   பாராட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு   பாராட்டு மடல் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.