ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான முதல் கட்ட பணியை அமைச்சர் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 6 திருச்சி மாநகர் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான முதல் கட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.