சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புத்தகக் கண்காட்சி

0 488
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த புத்தகக் கண்காட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், வாசிக்கும் பழக்கம், அறிவியல் திறன், படைப்பாற்றல் போன்ற திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சியை லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் திரு. அம்பிகாபதி தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகத்தின் சார்பாக 3000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்த கண்காட்சியில் ரூ. 22 ஆயிரத்திற்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.