திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர்,நண்பர் வீடு -நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0 309
Stalin trichy visit

திருச்சியில் அதிமுக முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள்அமைச்சர் காமராஜின் உறவினர்,நண்பர் வீடு மற்றும் நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கடந்த ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையின் அமைச்சராக இருந்தார்.

அமைச்சராக பணியாற்றியபோது தனது பெயரிலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலும் அதிகப்படியான சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காமராஜர் வீடு அலுவலகங்கள் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 49 இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் அவரது மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திருச்சியில் கே.கே.நகர் ஐயர் தோட்டம் பகுதியில் உள்ள காமராஜர் உறவினர் பாண்டியன் இல்லம், திருச்சி தில்லை நகரில் உள்ள காமரஜின் நண்பர் இளமுருகுவின் இல்லம் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் பாண்டியன் இல்லம், தில்லை நகரில் உள்ள நண்பர் இளமுருகுவின் இல்லம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.