கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் இன்று ( 8.7.22 )நேரில் பார்வையிட்டு முகாம் வாழ் மக்களுக்குத் தேவையான வீட்டு வசதி, சுகாதார வசதி மற்றும் அடிப்படைத் தேவை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இர.அபிராமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.