தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த வாலிபர்கள்

0 257
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், 07.07.2022 அன்று இரவு சுமார் 9.25 மணியளவில் திருவெறும்பூரில் இருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் Blue Colour Tractor வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த வாகனத்தின் பின்புறத்தில் பேட்ரிக் மற்றும் மார்ட்டின் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சக்தி நகர் என்ற இடத்தில் டிராக்டர் வாகனத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கீழே விழுந்துள்ளது.

அதனை கண்ட மார்ட்டின் மற்றும் பீட்டர் ஆகிய இருவரும் கீழே விழுந்த பணத்தாள்களை சேகரித்து, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அந்த வாகனம் எங்கு சென்றது என்று தெரியாததால், அந்த தொகையை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேற்கண்ட பணத்தின் உரிமையாளர் தாங்கள் தவறவிட்ட பணத்தொகையின் மதிப்பையும், தங்களுடைய வாகனத்தின் பதிவு எண்ணையும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திர மோகன் அவர்களிடம் தெரிவித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக சிறப்பான சேவை புரிந்த பீட்டர் மற்றும் மார்ட்டின் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் துறையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.