வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், பைக் கொள்ளை…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள ஸ்ரீவாரி அவென்யூ பகுதியில் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் பைக் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். சமயபுரம் அருகே பளூர் ஸ்ரீவாரி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான லட்சுமி நாராயணன்.இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மூன்று பவுன் வளையல், ரூபாய் 4000 ரொக்கம் யமஹா பைக் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் நகையை கொள்ளை அடித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்