மருத்துவமனைக்கு குழந்தையோடு சென்ற பெண் மாயம்…

0 295
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த பெண் மருத்துவமனைக்கு கைக்குழந்தையுடன் சென்றவர் மாயமானார்.. கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார்.

புள்ளம்பாடி அருகே மால்வாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி 20 வயதான மஞ்சு. இவர்களுக்கு பத்து மாதத்தில் பூவேந்தன் என்ற குழந்தை உள்ளது. இலையில் கடந்த 5 ம் தேதி காலை குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக புள்ளம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக கணவர் மனைவி மற்றும் குழந்தை இருவரையும் கல்லக்குடியிலிருந்து பேருந்தில் ஏற்றி புள்ளம்பாடிக்கு அனுப்பி உள்ளார். மருத்துவமனைக்கு சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கல்லக்குடி காவல்நிலையத்தில் தனது மனைவி மற்றும் குழந்தை காணவில்லை என கணவர் கார்த்திக் புகார் அளித்தார். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.