மின்சாரம் தாக்கி சிகிச்சை பெறுவர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

0 397
Stalin trichy visit

திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் தேவதர்ஷினி (21), மகன் முகிலன் (17) ஆகியோர் கடந்த மாதம் 26 ஆம் தேதி, மின்சாரம் தாக்கி, திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையறிந்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இதுகுறித்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு சிறப்பான சிகிச்சையினை வழங்கிட எடுத்துரைத்தார். இதன்படி, இவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் விவரங்கள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் நேரடி கவனத்திற்கு தினசரி அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினைப் பார்வையிட்ட மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மின்சாரம் தாக்கி பாதித்த இவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில், மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வரும் இவர்களை (10.07.2022) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன் இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சிறப்பான சிகிச்சையினைத் தொடர்ந்து வழங்கிட இம் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.டி.நேரு அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர்பிரதீப் குமார்உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.