மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
பாரத முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் G. M. வினோத் பாண்டியாதவ், பாலமுருகன் யாதவ், தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மாவீரன் அழகு முத்துகோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் பாரத ராஜா யாதவ், எழிலரசன், மற்றும் வழக்கறிஞர் சிங்கை சரவணன், திருப்பூர் செந்தில் , மார்க்கெட் மூர்த்தி, கருப்பையா, சரவணன், கணேசன், முத்துசாமி, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.