புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

த நொச்சியம் பகுதியில் உள்ள பாலாஜி ஸ்டோர் கடைக்கு ஜூலை 11ம் தேதி உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர். இக்கடையில் கடந்த 2021ம் ஆண்டு ஆய்வு செய்ததில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்தும் அபராதமும், ஜுன். 20ம் தேதி மீண்டும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் படி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.