திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இடையபட்டியில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே இடையபட்டி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் 40 வயதான பார்த்திபன். இவருக்கு பிரமிளா என்ற மனைவியும் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 15 வருடமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் பைனான்ஸில் கடன் வாங்கி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் நேற்று மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி மனைவி பிள்ளைகளை தவிக்க விட்டுச் சென்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.