ஸ்ரீரங்கம் அருகே அரசு பஸ் மீது கார் மோதல் : ஒருவர் படுகாயம்
கேரள மாநிலம் கொச்சி நசரத்மாட்டஞ்சரி ஜனதா ரோடு சென்னாட் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 52). இவர் தன்னுடைய அண்ணன் மற்றும் அண்ணியுடன் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு காரில் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். முக்கொம்பு அருகே உள்ள திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்த போது திருப்பூரிலிருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜான்சனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.