நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரசார் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமினை கவுன்சிலர் ரெக்ஸ் அவர்கள் தலைமை தாங்கி, ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார். முகாமில் வழக்கறிஞர் சந்திரன், பொறியாளர் பேட்டரிக், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சீலாசெலஸ், பஞ்சாயத்து ராஜ் அண்ணாதுரை, அன்பில் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அச்சார்சிங், ஓ பி சி சுப்பையா, வினோத், கலை பிரிவு பெஞ்சமின், டிடிஇ சரவணன், மணிவேல், அண்ணாதுரை, காமராஜ், விஜயலட்சுமி, ரஹ்மத்துல்லா, பாலா, பிரேம் மற்றும் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.