மக்கள் பணியில் 43ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் கமலா நேரு தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைப்பினை யும், பிலோமினால் புரத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அத்தெருவில் வாழும் மக்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடத்தில் திருவிழாவிற்கு முன்னாடி சாலை அமைத்து தாருங்கள் என்று கேட்டதற்கு இணங்க A.E.E.ஜெகஜீவன்ராம் J E.நரசிம்ம மூர்த்தி ஆகியோருடன் ஆய்வு செய்தார். மேலும் பர்மா காலனியில் சாக்கடை கட்டும் பணிக்காக தூர்வாரியதையும், திருவள்ளுவர் நகர் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த போது,கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.