நவல்பட்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்…
திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நவல்பட்டு, புதுத்தெரு, சோழமாதேவி, ஆனந்தம் நகர், மாணிக்கம் நகர், நேதாஜி நகர், சிட்கோ, பீப்பிள்ஸ் நகர், செல்வபுரம், காந்திநகர், திருவெறும்பூர், டி.நகர், ஐஏஎஸ் நகர், மலைக்கோவில், மலையடிவாரம், பகவதிபுரம், வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காதென தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் கூறி உள்ளார்.