மணப்பாறை நகரில்பல்வேறு இடங்களில் எம்.எல்.ஏ. அப்துல் சமது அதிகாரிகளுடன் ஆய்வு ‘
திருச்சி: ஜூலை:24. திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் காலையில் இருந்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகள் கேட்டு பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதற்கான அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதேபோல் மணப்பாறை திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சுரங்கபாதையில் பல நாட்களாக தேங்கியிருந்த மழை நீரை எம்.எல்.ஏ.அப்துல் சமது உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மின் மோட்டார் வைத்து சுரங்கபாதையில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தினர். அப்புறப்படுத்திய பகுதிகளை எம்எல்ஏ அப்துல் சமது பார்வையிட்டு மேலும் திருச்சி சாலையில் இரயில்வே மேம்பாலம் அடுத்த அரசுபேரூந்து பணிமனை அருகே அடிக்கடி நடக்கும் விபத்துகள் குறித்து அந்தப் பகுதியையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில்எம் .எல். ஏ .அப்துல் சமது தலைமையில் மணப்பாறை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சுப்பையா, மணப்பாறை நகராட்சி ஆணையர் சியாமளா, மற்றும் அதிகாரிகளுடன் அடுத்து வரக்கூடிய மழை காலங்களில் மழை பொழிந்தால் மணப்பாறை பேருந்து நிலையப் பகுதி மற்றும் பூங்கா சாலையில் மழைநீர் தேங்காமல் செல்வது குறித்தும், காழ்வாய்கள் தூர்வார்வது சம்மந்தமாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் காதர் மொய்தீன்,மாவட்ட பொறுப்பாளர் ஆரஞ்சு .அக்பர் பாட்ஷா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஷாஜகான், மன்ச்’ முஜிப் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.