பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தவர் சாவு

0 575
Stalin trichy visit

பணமங்கலம் மேம்பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்தவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பணமங்கலம் மேம்பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்தவர் நிலைத்தடுமாறி தடுப்பு கட்டையில் மோதி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.லால்குடி அருகே பல்லபுரம் தெற்கு தெருவைவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் 33 வயதான ஜீவகன் இவர் நேற்று மாலை தனது மோட்டார் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பணமங்கலம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக் தடுப்புச் சுவரில் மோதி நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.