மண்ணச்சநல்லூரில் பைக்கில் வந்த மர்ம நபர் ஜோசியம் பார்ப்பது போல் நாடகமடி பெண்ணின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை கழட்டிச் சென்றார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பெரியண்ணன் நகரில் பைக்கில் வந்த மர்ம நபர் ஜோசியம் பார்ப்பது போல் நாடகமாடி பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றிக் பொண்டு தப்பி ஓடி விட்டார்.
மண்ணச்சநல்லூர் பெரியண்ணன் நகரைச் சேர்ந்தவர் பசுபதி ஈஸ்வரன். இவரது மனைவி 35 வயதான பிரியதர்ஷினி. இவர் நேற்று மதியம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அந்த பெண்ணிடம் ஜோசியர் போல் நாடகமாடியுள்ளார். இந்நிலையில் ஜோசியம் பார்த்த நபர் அந்த பெண்ணிற்கு திருநீறு பூசியுள்ளார்.பின்னர் சுயநினைவை இழந்த அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் தாலி செயினை கழட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நினைவு தெரிந்து பார்த்தபோது கழுத்தில் கிடந்த தாலி செயின் மாயமானதை கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை கழட்டிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.