புள்ளம்பாடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர் அமைச்சர் கே.என்.நேரு

0 242
Stalin trichy visit

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வேளாண்மை — உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று (23.7.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடியில் ரூபாய்
2 கோடியே 41 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டிடம் கட்டப்படுவதற்கான வரைபடத்தினைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்,இ.ஆ.ப., இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.ரசியா ராஜேந்திரன் , மாவட்டப் பிரமுகர் திரு.க.வைரமணி மற்றும் வேளாண் பொறியியல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.