ஸ்ரீரங்கம் தேவி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒலிம்பியாட் பதிவு தொடங்கியது
செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் வேளையில் நம் மாணவர்கள் பங்கு பெற வேண்டிய ஒலிம்பியாட் போட்டிகள் பல உள்ளன. அதில் பங்குபெற்று வெற்றி பெறுவதன் மூலம் நம் மாணவர்கள் உலகளாவிய புகழ் பெற இயலும். இதில் நம் மாணவர்கள் நான்கு ஒலிம்பியாட்டில் பங்கு பெறலாம். ஆங்கிலம், அறிவியல், கணிதம் / சமூக அறிவியல் –
ஒலிம்பியாட்டில் பங்கு பெறுவதே பெறும் சிறப்பு அதற்கான நுழைவுக்கட்டணம் 150 ரூபாய், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். செல்போனில் வரும் வினாக்கருக்கு தொடர்ந்து பதில் அளிக்க வேண்டும். மூன்றாம் வகுப்பு முதல் உள்ள மாணவர்கள் பங்கு பெறுகின்றனர் அதில் பள்ளிக்கு 5 பேர் வீதம் 100 மாணவர்களுக்கு 20 பள்ளிகளுக்கு அந்த நல்லூர் ஒன்றியத்தில் ரூபாய் 15,000 பணம் கட்டி பதிவு செய்து இ – சேவை மையங்களின் கூட்டமைப்பினர் உள்ளனர். அந்தநல்லூர் ஒன்றியத்தில் 20 Uள்ளிகள் 100 மாணவர்கள் ஒலிம்பியாட்டில் பங்கு பெறுகின்றனர்.

அரசு | ஊராட்சி/ நகராட்சி/ உதவி பெறும் | நலத்துறை / தொடக்க / நடுநிலைப் Uள்ளிகள் மட்டும் பங்கு பெறுகின்றனர். இன்று ஸ்ரீரங்கம் தேவி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஒலிம்பியாட் பதிவு தொடங்கியது. இ.சேவை மைய கூட்டமைப்பு தலைவர் அப்துல்லா, செயலர் மோகன்ராஜ் இலவச பதிவை தொடங்கி வைத்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார்’ தலைமை ஆசிரியர்கள் பூங்கொடி, கீதா, லில்லி , சைவராஜ் பங்குபெற்று பதிவை மேற்கொண்டனர் –