மஞ்சள் பையுடன் பாத்திர இயக்கமும் இணைந்து நடத்த வேண்டும்: தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

0 285
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்ப டுத்தக்கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் அறிவிப்பு வெளியிடப் பட்டு இருந்தது.

ஐந்து பேரில் ஒருவருக்கு, சர்க்கரை வியாதி இருப்பதை போல், நாளை புற்றுநோய் வரும் சூழல் உருவாகும். டீ, காபி வாங்கி வருவதில் துவங்கி, இட்லி வேக வைப்பது முதல், பாலிதீன் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. பல கேரி பேக்குகள், மருத்துவ கழிவுகளை அழித்து சுகாதாரமின்றி செய்யப்படுகிறது. இதை தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பெயரளவில் இல்லாமல், கடும் தண்டனையுடன் கூடிய சட்டமாக அமல்படுத்த வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடைக்குச் செல்லும் போது கையில் பை எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. நாகரிகம் பெருகிவிட்டதாகக் கருதப்பட்ட பிறகு, கையில் பையுடன் சென்றால் ஒரு மாதிரியாகப் பார்க்கும் சூழல் வந்தது.

நம்மில் 99 சதவீதம் பேர் எந்தப் பாத்திரமும் இன்றி கைகளை வீசிக் கொண்டுதான் செல்கிறோம். எல்லாமும் பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தரப்படுகின்றன, அதுவும் நல்ல சூட்டோடு!
சின்னஞ்சிறிய இலையில் வைத்துத் தரப்பட்ட ஊறுகாய்க்கு, இப்போது சிறிய பிளாஸ்டிக் பை அல்லது பிளாஸ்டிக் டப்பா. சராசரியாக சைவ சாப்பாடு என்றால் 6 முதல் 8 பிளாஸ்டிக் பைகள். அசைவச் சாப்பாடு என்றால் 7 முதல் 9 பிளாஸ்டிக் பைகள். ஸ்டார் ஹோட்டல்களில் அப்பளத்தையும், உப்பையும் கூட பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தருகிறார்கள்.

இந்த நிலையில்,மஞ்சள் பை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்தான். அத்துடன் பாத்திரம் சேர்க்க வேண்டும் .

உணவகங்களுக்கு, தேநீர்க் கடைகளுக்கு, இறைச்சிக் கடைகளுக்கு, பூக்கடைகளுக்குச் செல்லும்போது அவற்றுக்குத் தேவையான பாத்திரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்
என்பதை மக்களுக்குப் புரியும் வகையில் விழிப்புணர்வை வேண்டும்.

பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, துணிப்பை , பாத்திரங்களையும் உள்ளிட்ட பாதுகாப்பான வழிமுறைக்கு மாற்ற வேண்டும்.

அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தருவோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்போம்.

2019-இல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கொண்டு வரப்பட்டபோது, பல உணவகங்களில் பாத்திரம் கொண்டு வருவோருக்கு 5 சதவிகித கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது.இப்போதும் அப்படிச் செய்யலாம்.

சாதாரணக் குடும்பத்தினர் கூட, மாதம் ஒன்றுக்கு சராசரியாக நூறு பிளாஸ்டிக் பைகளை வீட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

அவை அனைத்தும் அருகிலுள்ள சாக்கடையில், குப்பைத் தொட்டியில்
வீசியெறியப்படுகின்றன.இப்படியாக ஆண்டுக்காண்டு
கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகள்!

எனவே துணிப்பை உடன் பாத்திரம் இயக்கமும் எடுத்து செல்ல வேண்டும் என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநில, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.