ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழக தலைமைச் செயலர் இறையன்பு தன்னுடைய சிந்தித்ததும் சந்தித்ததும் என்ற நூலில் 16ஆவது அத்தியாயத்தில் அகஸ்திய பாரதி என்பவரின் சுய கற்றல் முறை பற்றித் தெரிவித்துள்ளார்.
அகஸ்திய பாரதி ஜூனியர் ஐஏஎஸ் அகடமி என்ற நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறம் மேம்பாடு அடைய பயிற்சிகள் வழங்கி வருகின்றார்.அந்நிறுவனத்தின் மூலம் ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று திருச்சி
மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி மெய்யழகன் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வுகளை எளிமையாக எதிர்கொண்டு வெற்றி பெற பயிற்சிகள் நேரடியாகவும்இணைய வழியிலும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம்Nmms, Trust, NTSC, போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் என்பதை பயிற்சியாளர் அகஸ்திய பாரதி அவர்கள் Uயற்சி அளித்தார்கள். வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம், பள்ளித் துணை ஆய்வர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர் – பள்ளியின் தலைமை ஆசிரியர் லில்லி ஃபுளோரா, வரவேற்றார்.
உதவி ஆசிரியர் இலட்சுமி நன்றி கூறினார்