திருவெறும்பூர் தி.மு.க. சட்டமன்ற அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவு

0 155
Stalin trichy visit

தமிழகத்தில் தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின், கழகத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் திருவெறும்பூரில் உணவின்றி தவிப்போருக்கு கழகத்தின் சார்பில் உணவுகள் வழங்கும் திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் கடந்த 15ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து தினந்தோறும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் ஆதரவற்றோர்கள் , சாலை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு என 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டமன்ற அலுவலகத்தில் உணவுகள் வழங்கப்பட்டன.

 

Leave A Reply

Your email address will not be published.