திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் திருத்தேரோட்ட விழா….
திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு விசாலாட்சி அம்மன் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காவிரி கரையில் உள்ள தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் பிரசித்திப்பெற்ற திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருமண தடைகள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் நடைபெற்று நாள்தோறும் விஷாலாட்சி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வளம் வந்தார் – இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சி ஆன திருத்தேரோட்டம் நேற்று மாலை 3 மணி அளவில் வடம் பிடிக்கப்பட்டு நடைபெற்றது – நூற்றுக்கணக்கான மக்கள் ஓம் சக்தி பராசக்தி என்கிற மந்திரம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர் – இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் ஞிலிவனேஸ்வரர் திருத்தேரும் ஆடி மாதத்தில் அம்மன் திருத்தேரும் வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம்.