காவல் உதவியாளர்கள் உள்பட 68 பேர் பணியிட மாற்றம்
68 people including police assistants have been transferred
திருச்சி, ஆக. 2 திருச்சி மாநகரில் சிறப்பு காவல்உதவி ஆய்வாளர்கள் உள்பட 75 காவல்துறையினரை பணியிடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, ஒரு உதவி ஆய்வாளர், 2 பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 29 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 9 பெண் தலைமைக்காவலர் உள்பட 21 தலைமைக்காவலர்கள், 7 முதல் நிலை பெண் காவலர் உள்பட 23 முதல்நிலை காவலர்கள், ஒரு காவலர் என்று 75 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கே.கே.நகர் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் டி.கருணாகரன், பாலக்கரை குற்றப்பிரிவு தலைமைக்காவலர் கண்ணன், தில்லைநகர் சட்டம்-ஒழுங்கு தலைமைக்காவலர் கெல்லர் ஜேக்கப், முதல் நிலை காவலர்கள் பூபாலன் (பாலக்கரை), வேல்முருகன் (கோட்டை), தனசேகர் (எடமலைப்பட்டிபுதூர்), சிலம்பரசன் (கோட்டை) ஆகியோர் தீவிர குற்றப்பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.