மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி….

0 382
Stalin trichy visit

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் லூர்து சேவியர். இவரது மகன் நிக்சன் (வயது 21). இவர் தனது நண்பர் சீனிவாசன் (24). என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விளாகம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஆலம்பாக்கத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கல்லக்குடி அருகே புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் விரகாலூர் வந்தபோது, திடீரென மழை பெய்தது. அப்போது, எதிரே சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இந்த விபத்தில் நிக்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.