மணப்பாறையில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

0 80
National

மணப்பாறையில் அருகருகே உள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை.
ரூ.7000 பணத்துடன் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்.

Click the image to Chat on Whatsapp

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆஞ்சநேயர்நகரில் பேக்கரி நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 47). நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை கடை திறப்பதற்காக வந்;தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த பணம் ரூபாய் 7000 ரொக்கப்பணம் மற்றும் சி.சி.டி.வியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் பேக்கரி அருகே உள்ள மற்றொரு கடையான சித்தையன் என்பவரது பாஸ்ட் ஃபுட் கடை, ஆரிய பெருமாள் என்பவரது மளிகை கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கடைகளில் எந்த பொருளும் திருடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மணப்பாறையில் அருகருகே உள்ள 3 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!