துறையூர் நகரில் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டு விழா..
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி வளாகத்தில் தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அறிவுசார் மைய ” கட்டிடத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் செல்வராணி துணைத் தலைவர் மெடிக்கல் முரளி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, உதவி பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் , நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி மதியழகன் , லலிதா , அம்மன்பாபு, கார்த்திகேயன், சுதாகர், இளையராஜா, நித்யா, ஜானகிராமன், செந்தில் , ஒப்பந்ததாரர் சுரேஷ் , வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.