திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான புளியஞ்சோலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியின் கிழக்கு அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோவிலில் அதிகாலை கோபூஜை 108 சங்கு பூஜை செய்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை 108 போற்றிகள் போற்றி வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. நிகழ்ச்சி கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சீர்காழி தூத்துக்குடி சேலம் மன்னார்குடி சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து ஜியர்கள் கலந்து கொண்டனர். மேலும் புளியஞ்சோலை ஆற்றில் புதுமண தம்பதிகள் மாங்கல்ய பூஜை செய்தும் பொதுமக்கள் ஜய்யாற்றில் நீராடியும் குளித்து ஆடி பெருக்கு தினத்தை கொண்டடினார்கள்.