திருச்சியில் 75வது சுதந்திர தினவிழா கோலாகலம்
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.