75வது சுதந்திர தினவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை, பொது விருந்து
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, ஏழை , எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ஆகியோர் இன்று (15.8.22) வழங்கி , பொதுமக்களுடன் பொது விருந்தில் பங்கேற்று உணவு உட்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ்,கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், வருவாய் கோட்டாட்சியர்ஆர். வைத்தியநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.