கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்

0 240
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் தொகுதி பெட்டவாய்த்தலையில் SDPI கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய கிராம அலுவல மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை ஹிந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில் முன்னறிவிப்பின்றி எடுத்துச் சென்ற அதிகாரிகளை கண்டித்து பெட்டவாய்த்தலை பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் சாலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாவட்ட தலைவர் திருச்சி முபாரக் அலி அவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி அவர்களும், மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் அவர்களும், மாவட்ட செயலாளர் மதர் ஜமால் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், மர்சூத் ஆகியோர்களும், சமுக ஊடக அணி மண்டல தலைவர் ரியாஸ் அவர்களூம், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜிஸ் அவர்களும், பெட்டவாய்த்தலை கிளைத்தலைவர் யாசர் அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

கொடி கம்பத்தை கலட்டிய ஸ்ரீரங்கம் கிராம அலுவலரை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொகுதி, கிளை நிர்வாகிகளும், செயல் வீரர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

60 நபர்களுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.