மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,பிலோமினாள் புரத்தில் சாக்கடையை தூர்வாரி குப்பைகளை அகற்றும் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் அமைக்கும் பணியையும், காவேரி நகரில் பாதாள சாக்கடை அமைய இருக்கும் இடத்தினையும்,மலையப்ப நகரில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சீர் பிரித்து வாங்குகிறார்களா என்பதையும், ஜோதி புரத்தில் சாக்கடையை தூர்வாரி குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவில் சாலையை சீரமைக்கும் பணியையும், காவேரி நகரில் சாக்கடையை தூர்வாரி சீரமைக்கும் பணியையும், மலையப்ப நகரில் சாக்கடையை தூர்வாரி சீரமைக்கும் பணியையும், குறிஞ்சி நகர் முதல் தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், குறிஞ்சி நகரில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சரியாக பிரித்து வாங்குகிறார்களா என்பதையும், , பர்மா காலனி நேதாஜி சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் அமைக்கும் பணியையும் மேலும் மாவட்ட ஆட்சியர் மூலமாக ஊனமுற்றோர்களுக்கு கடைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை மாமன்ற உறுப்பினரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற போது தனது மனைவி திருமதி.சத்யா செந்தில் அவர்களும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
