கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பேட்டி

0 254
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பேட்டி:

கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

“சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்களா?” என்ற கேள்விக்கு,

“திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும் அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

“திமுகவின் ஊழல்களை மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.